முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கருதப்படும் சீருடை, வீடியோ கசற் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காணி உரிமையாளர் நிலத்தை செதுக்கச் சென்ற வேளையில், புதைக்கப்பட்ட பெட்டியொன்றைக் கண்டு, அதனை பொலிசாரிக்கு அறிவித்ததன் பின்னணியில் இப்பொருட்கள் மீட்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலத்தின் போது இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment