நாடாளுமன்றை மீண்டும் கூட்ட இயலாது என ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த நாடாளுமன்றின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அலரி மாளிகையில் சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், குறித்த சந்திப்புக்குத் தமது கட்சியினர் செல்லப் போவதில்லையென தெரிவித்துள்ளது ஜே.வி.பி. இதனை மஹிந்த ராஜபக்சவுக்கு அக்கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரணம் தொடர்பில் பேசுவதுதான் அடிப்படையென்றால், அதனை கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றூடாக செய்வதே வழிமுறையெனவும் அதற்கு 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாட வேண்டிய அவசியமில்லையெனவும் அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment