திகன - அம்பாறை வன்முறைகளுக்கு 'மன்னிப்பு' கோரும் Facebook - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 May 2020

திகன - அம்பாறை வன்முறைகளுக்கு 'மன்னிப்பு' கோரும் Facebook


2018 திகன வன்முறைச் சம்பவங்கள் அதற்கு முன்னோடியாக அமைந்த அம்பாறை விவகாரத்துக்கும் பேஸ்புக் வலைத்தளமும் காரணமாக இருந்ததாக ஏற்றுக்கொண்டுள்ள அந்நிறுவனம் அதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

பேஸ்புக் ஊடான மனித உரிமை மீறல்கள் செயற்பாடுகள் குறித்த சுயாதீன மதிப்பீட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனைத் தவிர்ப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அந்நிறுவனம்  விளக்கமளித்துள்ளது.

தீவிர இனவாத குழுக்கள் தொடர்பில் பல வருடங்களாக முறையிடப்பட்டும், அது குறித்து அலட்சியமாக இருந்துள்ளதன் விளைவாக இதனை சித்தரித்துள்ள குறித்த நிறுவனம் அம்பாறை உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை இருந்ததாக தெரிவித்து உருவாக்கப்பட்ட சர்ச்சை வீடியோவைக் கட்டுப்படுத்தத் தவறியமை வன்முறை மற்றும் சேதங்களுக்குப் பங்களித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment