வெள்ளை வேன் கடத்தல் பற்றி கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது தகவல் வெளியிட்ட இருவரின் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவருக்கு வழங்கப்பட்ட பிணை செல்லுபடியற்றதென நீதிமன்றம் முடிவு செய்திருந்த நிலையில் இன்று அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்திருந்தார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தம்மை வெள்ளை வேன் சாரதிகள் என அறிமுகப்படுத்தியிருந்த நபர்கள் வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்ததாக முன்னர் பொலிசார் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment