முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான மாற்றீடு எதுவும் வழங்கப்படாமை குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
ஏனைய முன்னாள் ஆளுனர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் அறிவிக்கப்பட்டுள்ள அசாத் சாலியின் பாதுகாப்பு மீள வழங்கப்பட வேண்டும் என தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வழங்கப்பட முடியவில்லையாயின் அதற்குரிய காரணத்தை எழுத்து மூலம் தரும்படியும் அவ்வாறில்லையாயின் உடனடியாக அதற்கான ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment