ஹோமாகமயில் புதிதாக சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தைக் கைவிட்டுள்ளது அரசாங்கம்.
ஏலவே உள்ள மைதானங்களே பயன்படுத்தப்படாத நிலையில் இன்னுமொரு மைதானத்தின் அவசியம் என்னவென முன்னாள் தேசிய கிரிக்கட் அணி தலைவர் மஹேல ஜயவர்தன கேள்வியெழுப்பியிருந்ததையடுத்து இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் நிதியுதவியும் 'தவறான' செய்தியென நிரூபணமாகியுள்ளதன் பின்னணியில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment