கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து பேரினவாத காடையாளர்களால் மினுவங்கொட பகுதியில் திட்டமிட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் உடமைகள் மற்றும் உயிரும் சூறையாடப்பட்டு ஒருவருடமாகியும் இன்னும் அம்மக்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
அங்கு தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கான காப்புறுதி இழப்பீடும் முழுமையாகத் தரப்படாத நிலையில் மக்கள் மத்தியிலிருந்து இன்னும் அச்சம் களையப்படவில்லையெனவும் இதனால் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்புவதற்கான சூழல் இல்லாதிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் நீதி கிடைக்காத நிலையிலேயே ஒரு வருடம் கழிந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழப்பீடுகளை வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment