நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வரும் நிமித்தம் பல இடங்களில் கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் சமூக இடைவெளியைப் பேணி சுகாதார அறிவுரைகளைப் பேணாது மக்கள் மீண்டும் பழைய பழக்கவழக்கங்களுடன் நடந்து கொள்ள முயல்வதாகவும் அவ்வாறான நிலை அவதானிக்கப்பட்டால் மீண்டும் ஊரடங்கு ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் வேகமாக இடம்பெற்ற இடங்கள், அது போல கொரோனா பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக கடந்த காலத்தில் அடையாளங் காணப்பட்டு முடக்கப்பட்டிருந்த இடங்கள் குறித்தே இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment