போதைப் பொருளுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் ஷெஹான் மதுசங்கவுக்கு அனைத்து வகை கிரிக்கட் ஆட்டங்களிலும் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை.
வேகப்பந்து வீச்சாளராக தேசிய அணியில் இடம்பெற்றிருந்த ஷெஹான், தனது முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியிலேயே ஹட்-ட்ரிக் விக்கட்டுகளைக் கைப்பற்றி புகழடைந்திருந்தார்.
இந்நிலையில், அண்மையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகி தற்போது ஜுன் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment