ஜுன் 20ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் மீதான விசாரணை இன்றும் இடம்பெற்றிருந்த நிலையில் நாளையும் தொடரவுள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினரால் ஏழு மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றைக் கலைத்த ஜனாதிபதி ஜுன் 2ம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றைக் கூட்ட வேண்டும் என்பதே அரசியல் சட்டம் எனும் நிலையில், அது முடியாது போயுள்ள நிலையில் பழைய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என வாதிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment