அரசியல் மற்றும் இன்னோரன்ன பேதங்களுக்கும் அப்பால் நாட்டின் இனங்களுக்கிடையில் பரஸ்பர பன்மைத்துவ கலாசாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பௌத்த மதகுருமார்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் சார்ந்த உற்சவ கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து, இனிப்பு பண்டங்கள் வழங்கும் நிகழ்வு மீவளதெனிய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுள்ளது.
நோன்புப் பெருநாள் தினமான நேற்று (24) மீவளதெனிய பிரதேசத்திலுள்ள, கம்புராதெனிய டிகிரி போகககொட விஹாரையின் விகாராதிபதி மீவதுரே வஜிரயான தேரர் தலைமையில், மீவளதெனிய, கெலிஒயாவிலுள்ள அல் ஹுதா ஜும்மா மஸ்ஜிதில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு நேரடியாக விஜயம் செய்த விகாராதிபதி, பழங்கள், இனிப்புப் பண்டங்களை மஸ்ஜித் பரிபாலன சபையிடம் கையளித்து வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்நடவடிக்கை நம்பிக்கை தரும் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்த பிரதேச முஸ்லிம்கள், தேரருக்கு நன்றி கூறி இம்முன்னெடுப்பை பாராட்டுகின்றனர்.
-எம். அஸ்பாக்
No comments:
Post a Comment