ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, த.தே.கூ உட்பட எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த கூட்டம் அலரி மாளிகையில் தற்போது இடம்பெறுகிறது.
இதில் சுகாதார அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் செயலாளர்கள், பாதுகாப்பு படை முக்கியஸ்தர்கள் மற்றும் கொவிட்-19 செயலணி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றைக் கூட்டுவதற்குப் பதிலாக அலரி மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து 'கலந்துரையாட' மஹிந்த ராஜபக்ச முயன்றிருந்த நிலையில் அது முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment