இது வரை எட்டு அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 May 2020

இது வரை எட்டு அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போர் உடல்களை எரிப்பது மாத்திரமே தீர்வென இலங்கை அரசு மார்ச் மாதம் 31ம் திகதி திடீரென முடிவெடுத்திருந்தது. இதனைக் காரணங் காட்டி சாதாரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களது உடலங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சுற்றுநிறுபத்துக்கு இடைக்காலத் தடை கோரி இதுவரை எட்டு அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வியாழனன்று வரை (7) சிவில் சமூக அமைப்புகள் சார்பில் இரு வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் எம்.ஏ சுமந்திரன் பிறிதொரு வழக்கில் இலவசமாக ஆஜராவதாக தெரிவித்ததையடுத்து தற்போது அரசியல் பிரமுகர்களும் வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இப்பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் பைசர் முஸ்தபா மற்றும் ரிசாத் பதியுதீனும் அடிப்படை உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். எனினும், இதுவரை வழக்குகளை விசாரிப்பதற்கான தேதி குறிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment