அக்குரணை மற்றும் பேருவளை பகுதிகளில் கொரோனா பரவல் பின்னணியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் இப்பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததோடு பெருமளவு மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது இப்பிரதேசங்கள் வழமை நிலைக்கு வந்துவிட்டதாகவும் இன்று முதல் அங்கு செல்வதற்கோ அங்கிருந்து வெளியேறுவதற்கோ தடையேதுமில்லையெனவம் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment