உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
ஜுன் 20ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்காடப்பட்டு வரும் நிலையில் தீர்ப்பையடுத்தே புதிய தேதி அறிவிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆணைக்குழு இது வரை 5 சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருப்பதாகவும் தேர்தலை நடாத்துவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டால் உடனடியாக செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment