கடற்படையினருக்குள் பரவியுள்ளதைத் தவிர நாட்டின் சமூக மட்டத்தில் எதுவித கொரோனா பரவலும் இல்லையென தெரிவிக்கின்றார் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.
தற்சமயம் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1027 ஆக இருக்கின்ற அதேவேளை, அதில் 584 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் தொற்றுக்குள்ளான அனைவருமே கடற்படையினர் என்பதால் சமூக மட்டத்தில் கொரோனா முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment