இலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
முதலில், மோதரயில் உயிரிழந்த சகோதரியைத் தவிர்த்து கொழும்பில் ஏனைய இடங்களில் கண்டறியப்பட்டவர்கள் பிழையாக அடையாளங்காணப்பட்டதாக இராணுவ தளபதி நேற்றைய தினம் தெரிவித்திருந்ததோடு, அதற்கமைவாக மூவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனினும், தற்போது அன்றைய கொரோனா பரிசோதனைகள் முழுவதிலுமாக தவறுகள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ இரசாயன பரிசோதனை நிபுணர்களின் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் காணொளியூடாக விளக்கமளித்துள்ளார்.
அவரின் விளக்கத்தைக் கீழ்க்காணலாம்: Video courtesy Hiru TV
No comments:
Post a Comment