கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து எதுவித நிதியுதவியும் இது வரை கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து, இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே வினவிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நிதியமைச்சின் கூடுதல் செயலாளர் எஸ்.ஈர் ஆட்டிகல, உலக வங்கி 127 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத் தருவதாக கூறியுள்ளதாகவும் அது 'வந்து' சேரவில்லைனெவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment