நாட்டில் கொரோனா சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், தேர்தலை நடாத்துவதில் எதுவித தடங்கலும் இல்லையென சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க கடிதம் வழங்கியுள்ள நிலையில் தேர்தலை நடாத்தாமல் மறுக்க முடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வாவே இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை அனில் ஜாசிங்க ஜனாதிபதிக்கு இதனை கடிதம் மூலம் தெரிவித்திருந்ததாக விளக்கமளித்துள்ளார்.
ஜுன் 20 பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை ஐந்தாவது நாளாக இன்று தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment