அண்மையில் மாளிகாவத்தை பகுதியில் நெரிசலில் சிக்குண்டு மூன்று பெண்கள் உயிரிழந்திருந்த சம்பவத்தின் பின்னணியில் மாளிகாவத்தை பொலிசாருக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் பணம் விநியோகிக்கப்படவுள்ள விபரம் பொலிசாருக்கு ஏலவே தெரிந்திருந்ததாக நீதிமன்றில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் சம்பவத்துக்கு இரு மணி நேரத்துக்கு முன்பாக அங்கு சென்ற மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரியொருவரு அருகில் இருந்த சிசிடிவியை சம்பவம் இடம்பெற்ற கட்டிடத்தின் பக்கம் திருப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் கைதான நபர்களுக்கு ஜுன் 4ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment