முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்குப் பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நாளை முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தி நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் பின்னணியில் ராஜிதவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும், வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த ராஜித பிணையையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே நாளை முடிவு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment