சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்க முன் வாருங்கள்: மு.ரஹ்மான்! - sonakar.com

Post Top Ad

Friday, 22 May 2020

சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்க முன் வாருங்கள்: மு.ரஹ்மான்!


மருத்துவர்கள், பொறியியலாளர்களை உருவாக்க நாட்டம் காட்டி வருவது போல், சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்குவதற்கும் சமூகத்தில் அக்கறை உருவாக வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

நேற்றைய தினம் சோனகர்.கொம் அரசியல் நேரலையில் இணைந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அரசியலில் சிறந்த ஆளுமையும் சமூக நோக்குடனான  சிந்தனையுடனும் செயற்படக்கூடிய எதிர்கால தலைவர்களை உருவாக்க பெற்றோரும், சமூகமும் பங்களிக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

எனினும், தற்காலத்தில் அதில் நாட்டமில்லாத நிலையிலேயே இருக்கும் அரசியல் தலைவர்கள் விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் இந்நிகழ்வில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு:

No comments:

Post a Comment