ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் சோனகர்.கொம் அறிந்த வகையில் நான்கு தனித்தனி குழுக்கள் அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்குக் களமிறங்கியுள்ளது. அதில் இரு குழுக்கள் ஏலவே பதிவு செய்துள்ள நிலையில் ஏனைய இரு குழுக்கள் திங்களன்று தமது வழக்குகளை பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மூன்றாவது குழு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எதுவித கட்டணமும் இன்றி ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகள் மு.கா தலைவர் சுமந்திரனை விமர்சிப்பதாக விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வழக்காடலில் தமது கட்சியும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மு.கா தலைவரின் கருத்தடங்கிய காணொளி:
மு.கா தலைவரின் கருத்தடங்கிய காணொளி:
No comments:
Post a Comment