குவைத்திலிருந்து நாடு திரும்பிய 70 பேரளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் நாளைய தினம் 273 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடாகியிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.எல் 218 விமானம் ஊடாகவே இப்பயணம் ஏற்பாடாகியிருந்த அதேவேளை தற்சமயம் குறித்த நபர்களுக்கு தற்காலிகத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 1182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் 695 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment