மஹியாவ: வெசக் தினத்தில் இறைச்சி விற்றதாக சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Thursday, 7 May 2020

மஹியாவ: வெசக் தினத்தில் இறைச்சி விற்றதாக சர்ச்சை


மஹியாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடம் என தெரிவிக்கப்படும் இடத்தில் வெசக் தினத்தில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனை மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி பௌத்த துறவியொருவரினால் பொலிசார் வரவழைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பொலிசாரின் பாதுகாப்புடேனேயே அங்கு மாமிசம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பின்னர் அங்கு வந்த பொலிசார் கடையில் இருந்த நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

போயா தினத்தில் இவ்வாறு மாமிச விற்பனை, அதுவும் கொரோனா சூழ்நிலையில் நடப்பது தவறு என பௌத்த துறவி சுட்க்காட்டியிருந்த நிலையில் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment