குவைத்திலிருந்து வந்து முகாமில் தங்கியிருந்த பெண்ணொருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday, 25 May 2020

குவைத்திலிருந்து வந்து முகாமில் தங்கியிருந்த பெண்ணொருவர் மரணம்


குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நிமித்தம் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 52 வயது பெண்ணொருவர் இன்று காலை மரணித்துள்ளார்.

சுகயீனமுற்ற பெண், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவரோடு நாடு திரும்பி, முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment