கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் ஏப்ரலிலிருந்து 25ம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடாத்த முடியாமல் போயிருந்தது. இந்நிலையில் ஜுன் 20ம் திகதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், எதிர்பார்த்தபடி நாடு வழமைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் ஜுலை பிற்பகுதி அல்லது ஓகஸ்ட் முற்பகுதிக்கு தேர்தல் மீண்டும் பின் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு 35 தினங்கள் முன்பாக நாடு இயல்பு நிலையில் இல்லாவிட்டால் மீண்டும் தள்ளி வைக்க நேரிடும் என முன்னர் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் மே 15ம் திகதி நாடு வழமை நிலைக்குத் திரும்பியிருக்க வேண்டும். எனினும், அதற்கான சாத்தியக்கூறும் இல்லாத நிலையில் பெரும்பாலும் தேர்தல் பின்போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜுன் 20 தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment