பாடசாலைகளை உடனடியாகத் திறக்கக் கூடிய சூழ்நிலை தற்போது இல்லையென தெரிவித்துள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.
மே 11 நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் முன்னெடுப்புகள் பற்றி பேசப்படுகின்ற போதிலும் சுகாதார வசதிகள் மற்றும் கொரோனா சூழ்நிலையின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, உடனடியாக பாடசாலைகளைத் திறக்கக் கூடிய சூழ்நிலையில்லையெனவும் அதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜுன் 20 தேர்தலை நடாத்தும் நோக்கில் இலங்கையில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்ற நிலையில் பாடசாலைகளைத் திறக்க அவசரப்படத் தேவையில்லையென அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளதோடு மேல் மாகாணத்தில் கொரோனா அபாயம் குறித்தும் மேலதிக அவதானம் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment