கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஐவர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த சாரதியொருவருக்கு கொரோனா ஏற்பட்டிருந்த நிலையில் அவரோடு நெருக்கமாக இருந்த 28 பேருக்கு தனிமைப்பட உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், அதை மீறி உலவித்திரிந்த நிலையில் குறித்த நபர்களைக் கைது செய்ய கடற்படையினர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு 28 பேரை கைது செய்து முகாமுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
அதில் ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த ஐவரே இதுவரை வீடு திரும்பியுள்ள அதேவேளை மேலதிகாக தமது 21 நாள் நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவொன்றும் இன்றைய தினம் வீடு செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment