தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் அவதானம் வேண்டும் எனவும் மீண்டும் பரவவும் கூடும் எனவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சு மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், வியாபாரிகள் வழமைக்குத் திரும்ப முதல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
தற்சமயம் இலங்கையில் மொத்தமாக 1028 பேர் தொற்றுக்குள்ளாகி அதில் 584 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment