ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்: ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற்றது குடும்பம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 May 2020

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்: ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற்றது குடும்பம்

y9pP9Oy

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் ஒரு வருட காலத்தின் பின் எதுவித அடிப்படையுமில்லாமல் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்ததாகக் கூறி அவரது தந்தை மற்றும் சகோதரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பிறிதாக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இம்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றில் இன்று முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிஜாஸின் கைது தொடர்பில் போதிய விளக்கம் வெளியிடப்பட்டிருக்காத நிலையில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கமும் விளக்கம் கோரியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment