குணசிங்கபுர பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கொண்டு செல்லப்பட்ட இருவர் இன்று அங்கு உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் காலையில் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மாலை வேளையிலும் இன்னொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இருவர் தொடர்பிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமா என்பது குறித்து பரிசோதனை முடிவிலேயே தீர்மானிக்க முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கொழும்பு பகுதியில் நிரந்தர வதிவிடமற்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்கள் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment