ஜுன் முதலாம் திகதி இலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நிலவும் ஊகங்களை மறுதலித்துள்ளது கல்வியமைச்சு.
மே 11ம் திகதி முதல் ஆசிரியர்களை கடமைக்குத் திரும்புமாறும், ஜுன் 1ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் பரவி வரும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஜுன் 1ம் திகதி பாடசாலைகளைத் திறப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரை இல்லையென கல்வியமைச்சு விளக்கமளித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும் என மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment