கொழும்பு, குணசிங்கர பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த பொது மக்களில் இரு முதியவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்திருந்தனர். குறித்த நபர்களுக்கு நிரந்தர வதிவிடமோ உறவினர்களோ, ஆளடையாளமோ இல்லையென பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர்களது உடலங்கள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, கொரோனா பாதிப்பில்லையென தெரிவிக்கப்பட்ட போதிலும் இருவரது உடலங்களையும் முல்லைத்தீவில் எரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதையறிந்த பிரதேச மக்கள் குழுவொன்று அங்கு தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து பதற்ற நிலை தோன்றியுள்ளது.
கொட்டிகாவத்தையில் மின்சாரம் மூலமே தகன நடவடிக்கை இடம்பெறுகின்ற அதேவேளை அங்கு அந்த வசதி இல்லாததால் சாதாரண தகன நடவடிக்கையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே பிரதேசத்தின் சுகாதார நலன் என்ற வாத - விவாதமும் சர்ச்சையும் தோன்றியுள்ளது. இப்பின்னணியில் பகல் வேளையில் தகனம் செய்ய முடியாமல் போன போதிலும் இரவு வேளையில் பலத்த பாதுகாப்புடன் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment