கொரோனாவால் உயிரிழந்த உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கையின் கிறிஸ்தவ சமூகத்தின் சார்பாகவும் அடிப்படை உரிமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் ஒசல ஹேரத் இவ்வழக்கை பதிவு செய்துள்ளார்.
ஏலவே முஸ்லிம் சமூகம் சார்பாக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு வழக்கு நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment