இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கிரிக்கட் மைதானத்துக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 30 மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்பு செய்யவுள்ளதாக தான் தெரிவித்த கருத்து தவறானது எனவும் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
பந்துல குணவர்தனவின் தகவலைக் கொண்டே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் தற்போது அதற்காக வருந்திக் கொள்வதாகவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.
கம்மன்பிலவின் தகவலை ஐ.சி.சி தரப்பில் மறுதலித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment