வெலிசர கடற்படை முகாமில் கொரோனா பரவல் அதிகமாக இடம்பெற்றுள்ள மகசென் பகுதி குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 265 கடற்படை வீரர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் முகாமின் குறித்த பகுதியிலிருந்தே அதிகமானோர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் இலங்கையில் 527 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் பெரும்பாலானோர் கடற்படை சிப்பாய்கள் மற்றும் உறவினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இப்பின்னணியில் நாட்டில் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment