வா'சேனை: போதை மாத்திரைகளுடன் இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 9 May 2020

வா'சேனை: போதை மாத்திரைகளுடன் இருவர் கைது


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் இன்று சனிக்கிழமை இரவு 09.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன்; ஓட்டமாவடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் 140 குளிசைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில்  130 போதை மாத்திரைகளும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து பத்து போதை மாத்திரைகளுமாக 140 மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு காலவேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளை கைதுசெய்யும் வகையிலும் பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment