எரிக்க முற்பட்ட ஜனாஸா விடுவிப்பு: ரெஹான் - அலிசாஹிர் முயற்சி! - sonakar.com

Post Top Ad

Friday, 8 May 2020

எரிக்க முற்பட்ட ஜனாஸா விடுவிப்பு: ரெஹான் - அலிசாஹிர் முயற்சி!

https://www.photojoiner.net/image/7Q20YOhx

வெலிகமயில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் வபாத்தான 54 வயது ஷரீபத்துந் நிசா என்ற பெண்ணின் ஜனாஸாவை எரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவின் தலையீட்டால் தடுக்கப்பட்டுள்ளது.



முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, ரெஹானைத் தொடர்பு கொண்டு பேசியதன் பயனாக உடனடியாக களத்தில் குதித்த ரெஹான் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத ஒரு உடலத்தை எரிக்க முடியாது என கடும் பிரயத்தனம் மேற்கொண்டு இதனைத் தடுத்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலை பணிப்பாளர் Dr திருமதி மெதிவக்கவை தொடர்புகொண்டு ஜனாஸாவை அவசரமாக நல்லடக்கம் செய்யும் வகையில் உடனடியாக விடுவிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக ஜனாஸா இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment