சஜித் தரப்பின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி வழக்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 May 2020

சஜித் தரப்பின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி வழக்கு!


சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கொரோனா சடலங்களை எரிப்பதற்கு எதிராக கிறிஸ்தவ சமூகம் சார்பாக வழக்குத் தாக்கல் செய்திருந்த ஒசல ஹேரத்தே இந்த வழக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டாரவை சமகி பலவேகயின் செயலாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கவில்லையெனும் அடிப்படையில் அவரால் அனுமதிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் செல்லுபடியாகாது என மனுதாரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment