கோட்டா அரசுடன் சேரப் போவதில்லை: ரணில் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Friday, 29 May 2020

கோட்டா அரசுடன் சேரப் போவதில்லை: ரணில் சூளுரை!


ஐக்கிய தேசியக் கட்சியானது, தற்போதைய அரசுடன் இணைந்து ஒரு போதும் கூட்டாட்சியில் ஈடுபடப் போவதில்லையென்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

எந்தத் தடை வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், கோட்டா அரசுடன் இணையப் போவதில்லையென சூளுரைத்துள்ளார்.

இதேவேளை, இன்றைய செயற்குழு கூட்டத்தில் மீண்டும் அகில விராஜ் காரியவசம் செயலாளராகவும் ரவி கருணாநாயக்க உதவித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment