அரச ஊழியர்கள் தமது மே மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்க முயற்சிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கான சம்பள தொகையை ஈடு செய்ய 100 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்க முடியாதவர்கள் அதில் பாதி அல்லது, ஒரு வாரம், ஒரு நாள் என ஏதாவதொரு வகையில் விட்டுக்கொடுப்பை செய்தால் அதனூடாக நிதிக்குறைபாட்டை சமாளிக்கலாம் என ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர கடிதம் மூலம் அனைத்து பொது சேவை ஊழியர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா நிவாரண நிதியென அரசு அறிவித்திருக்கும் 5000 ரூபாவும் மக்களை முழுமையாகச் சென்றடையவில்லையென தெரிவிக்கப்படும் நிலையில் ஊரடங்கை தளர்த்தி நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment