முகாம்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு சொந்த செலவில் ஹோட்டல் ரூம் - sonakar.com

Post Top Ad

Monday, 4 May 2020

முகாம்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு சொந்த செலவில் ஹோட்டல் ரூம்


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் 14 நாட்கள் கட்டாயமாகத் தம்மைத் தனிமைப்படுத்த வேண்டும் எனும் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது.

இந்நிலையில், முகாம்களுக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் அதன் செலவை குறித்த நபர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உச்ச கட்ட சொகுசான சூழ்நிலையை விரும்புபவர்கள் கூட வழக்கமாக நாளாந்தம் 20,000 - 40,000 செலுத்தும் நட்சத்திர ஹோட்டல் அறைகளை தினசரி 7500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட விலைக்கழிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தனிமைப்படுத்தல் முகாம்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடுவோருக்காக இவ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment