இலங்கையில் ஏற்கனவே இருக்கும் கிரிக்கட் மைதானங்களை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையில் புதிதாக ஒரு மைதானம் அமைக்கத் தேவையா? என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன.
ஹோமாகமயில் 40,000 பார்வையாளர்களை உள்ளடக்கக் கூடிய வகையிலான பாரிய கிரிக்கட் மைதானம் ஒன்றை உருவாக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் மஹேல இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போது இருக்கும் சர்வதேச தர மைதானங்களில் போதியளவு சர்வதேச ஆட்டங்களோ, உள்நாட்டின் முதல் தர ஆட்டங்களோ இடம்பெறாத நிலையில் இவ்வாறு புதிதாக ஒரு மைதானம் அமைப்பது அவசியமா எனவே மஹேல தனது கேள்விக்கு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment