மாளிகாவத்தை பகுதியில் நிவாரண விநியோக நடவடிக்கையொன்றின் போது நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனி நபர் ஒருவரின் வருடாந்த சக்காத் விநியோகத்தின் போது நெரிசல் ஏற்பட்டு, இவ்வுயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, நிவாரண விநியோகத்தை ஏற்பாடு செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment