நேற்றைய தினம் முல்லைத்தீவு முகாமில் உயிரிழந்த இருவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
கொழும்பு, குணசிங்கபுர பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கொண்டு செல்லப்பட்ட இருவரே நேற்றைய தினம் உயிரிழந்திருந்தனர். இருவரும் வயோதிபர்கள் எனவும் நிரந்தர முகவரி அற்றவர்கள் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்றிருக்கவில்லையென இன்று விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment