மொரட்டுவ, சொய்சாபுர பகுதி ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தி, பொலிசாரின் முன்னிலையிலேயே அங்கு துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
34 வயதுடைய குறித்த நபர் 2018ம் ஆண்டில் தெஹிவளை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்ததன் பின்னணியில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொலிசார் மூவர் ஏலவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment