நாட்டில் நிலவி வரும் காலநிலையின் பின்னணியில் எட்டு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்கூட்டியே இவ்வெச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில், காலி, மாத்தறை, களுத்துறை, ரத்னபுர, மாத்தளை, கேகாலை, கண்டி மற்றும் சீதவக்க (கொழும்பு) ஆகிய இடங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மழைவீழ்ச்சி அதிகமான இடங்களில் மக்களை அவதானமாகவும் முடிந்தளவு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment