கொரோனா சூழ்நிலையில் சிங்கள - தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர், வெசக் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக அனுஷ்டித்துள்ள நிலையில் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது சூபி தரீக்காக்களுக்கான கவுன்சில்.
அதன் தலைவர் , ரியாஸ் சாலி இது குறித்து விடுத்துள்ள வேண்டுகோளில், பாரிய அளவில் கூட்டம் கூடுதல் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து முன்மாதிரியான சமூகமாக நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் அறிவுரைகளுக்கு ஏற்ப வக்பு சபையின் வழிகாட்டல் வரும் வரை தெவட்டகஹ பள்ளிவாசலும் மூடப்பட்டேயிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment