காபந்து அரசின் எல்லைகளை மீறி செலவு செய்து வரும் அரசு, ஏலவே நஷ்டமடைந்த அனுபவம் இருந்தும் மீண்டும் புதிதாக 2500 மாடுகளை இறக்குமதி செய்வதற்குத் தயாராவதானது இன்னுமொரு ஊழலுக்கான ஆயத்தம் என தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.
இதற்கு முன்னர் அரசின் நடவடிக்கைகளை நம்பி இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலிட்டவர்கள், வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் திணறி வருவதோடு இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள் உயிரிழந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், அந்த அனுபவத்தையும் மீறி தொடர்ந்தும் புதிதாக மாட்டு இறக்குமதிக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வேடிக்கையானது என சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசின் நிலை தற்போது மாட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு இறங்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் புதிதாக 2500 பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையில் அசாத் சாலி இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment